தேர்தலை சந்திக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ..!

நாடு முழுவதும் மாநிலங்களவை தேர்தலில் இதுவரை நாற்பத்தி ஒரு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 

தமிழகத்தில் ராஜேஷ்குமார், பா.சிதம்பரம், சி. வி சண்முகம் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்திர பிரதேசத்தில் 11 பேரும், பீகாரில் 5 பேரும், ஆந்திராவில் 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 11 மாநிலங்களில் ஒட்டுமொத்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் கூடுதல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், பிரபல ஊடகம் குழுமத்தலைவர் சுபாஷ் உள்ளிட்டோர் தேர்தலை சந்திக்க உள்ளனர்.