மதம் மாற சட்டப்படி தடையில்லை..!

ட்டாயப் படுத்தப் படாத பட்சத்தில் மதம் மாற சட்டப்படி தடை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுவை நீதிபதிகள் பெரிய அளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதாக கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

 

கட்டாயப்படுத்தப்படாத மதமாற்றம் சட்டப்படி தடை இல்லை என்றும், ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.