சில நொடிகளில் திடீரென தடம் புரண்ட ரயில்..!

ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிகளவிலான பயணிகளுடன் சென்றபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தரையில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.