சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகள் 9 பேர் இன்று பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்க உள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக சந்திரசேகரன், சிவஞானம், முரளிதரன், மஞ்சுளா, தமிழ் செல்வி ஆகியோர் பதவி ஏற்றனர்.

 

இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இவர்கள் நியமனங்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.