ரோபோக்களால் இனி வலியை உணர முடியும்..!

ரோபோக்களும் வலியை உணரும் செயற்கையான மின்தோல் தயாரித்து இங்கிலாந்து மின் பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்திரன் என்பவர் தலைமையிலான குழு வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் மின் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

 

இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர் திறன் கொண்ட நவீன தலைமுறையை ஸ்மார்ட் ரோபோக்களை உருவாக்க உதவும் எனவும், மூளையிலிருந்து வரும் சமிக்கைகளை பதிலளிக்கக் கூடிய பெரிய அளவிலான மின் தோல் உருவாக்குவதற்கு முன் மாதிரியாக இருக்கும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

வலி போன்ற எதிர்பாராதவற்றை நாம் வாழ்வின் ஆரம்பத்திலேயே பழகி கொள்வதாகவும் அதேபோன்றதொரு அனுபவத்தை ரோபோக்களும் உணரும் வகையில் எலக்ட்ரானிக் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தங்களது உடல் பாகங்கள் சேதம் அடைவதில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என பொறியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.