அம்மாவை பிரிந்து பள்ளிக்கு போக மாட்டேன் எனக்கூறும் சுட்டிக் குழந்தை..!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் அம்மாவைப் பிரிந்து செல்ல மாட்டேன் எனவும், பிரச்சினைகள் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருப்பேன் என கதையளந்து அழுதுகொண்டே அங்கன்வாடிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் இந்த சுட்டி குழந்தையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.