சாலையில் பிண்ணி பிணைந்து நடனமாடிய பாம்புகள்..!

ர்மபுரி அருகே சாலையில் பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடி கொண்டிருந்துள்ளது.

 

இதனை கண்ட பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லாமல் அச்சத்துடன் நின்றனர். நீண்ட நேரம் பின்னிப்பிணைந்த நடனமாடிய பாம்புகள் ஒருவழியாக அருகில் இருந்த புதருக்குள் சென்றது. இதனால் அச்சமடைந்த பகுதிவாசிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவலறிந்த வனத்துறையினர் அங்கு மறைந்திருந்த இரண்டு பாம்புகளைப் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.