பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கொரோனா தொற்று..!

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டன் அரசின் இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகனான ஆண்ட்ரூ பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி அரசு கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

இதனையடுத்து அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் எலிசபெத் அரியணை ஏறி 70 ஆவது ஆண்டைக் குறிக்கும் நிலையில் அவர் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.