காஷ்மீரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ், தேசிய பாதுகாப்பு செயலாளர், துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அண்மை காலமாக காஷ்மீரில் காவல்துறயினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிலாளர்கள் பயங்கரவாதிகள் கொலை செய்கின்றனர். இதனையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்டதாக காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள் :
நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்
இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
பாஜக பிரமுகர் உமா சங்கர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை..!
6 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு