பாம்பை அசால்டாக பிடித்து புற்றுக்குள் விடும் சிறுமி..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 4 வயது சிறுமி அச்சமின்றி பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக இழுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. நிஷா என்ற நான்கு வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் 4 அடி நீள பாம்பு வரவே அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஆனால் சற்றும் அசராமல் அசால்ட்டாக பாம்பை சிறுமி கையில் பிடித்துள்ளார். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதனை பாம்பு புற்றுக்குள் விடுவித்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.