தரைப்பாலத்தை அடித்துச் சென்ற பாலாற்று வெள்ளம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூர் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தில் மக்கள் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் மாதனூர் பகுதியில் இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்காலிகமாகமணல் மூட்டைகள் வைத்து பாலம் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி மீண்டும் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சிலர் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





