சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்லூரிகளின் முதல்வர்கள் எழுதியுள்ள கடிதத்தில் வரும் ஜூன் 2ம் தேதி தொடங்க இருந்த எழுத்து தேர்வு ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைக்கப்பட்டது கல்லூரிகளில் தகவல் பலகையில் இடம் பெற செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





