பிரதமர் நரேந்திர மோடி 26-ஆம் தேதி சென்னை வருகை..!
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகிற 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர இருக்கும் இடங்கள் குறித்தும், அவரது பயண திட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி இருபத்தி ஆறாம் தேதி பிற்பகல் 3.55 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார்.
சென்னை விமான நிலையத்தில் 5.10 பிரதமர் வந்து இறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்தடைகிறார்.
பின்னர் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெற இருக்கும் பெரிமேடு ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் காலை 5.45 மணிக்கு வருகிறார். இந்த பயணத்தின் இடையே அவருக்கு பாஜகவினர் சார்பில் வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 5.45 மணிக்கு வரும் பிரதமர் மோடி இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து இந்திய விமானப் படை புறப்பட்டு இரவு 10 மணிக்கு செல்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





