--- --:--:-- --

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்..!

3

கர்நாடகா அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அல்ஹாஜா பானு என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் பிறந்தன. பிரசவத்திற்கு பின் தாயும் நான்கு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

ஆராய்ச்சி முடிவுகளின்படி 4 குழந்தைகள் ஒன்றாக பிறப்பது மிகவும் அரிது எனவும் 5 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இவ்வாறு குழந்தைகள் பிறக்கும் எனவும், அதற்கு மரபியல் காரணிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon