--- --:--:-- --

மதுரையில் இனிமே கொரியர் பார்சல் பறந்து தான் வரும் ட்ரோன் மூலம் சாதனை..!

1

தமிழகத்தில் முதன்முறையாக வளர்ந்துவரும் நிறுவனமான ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மதுரையில் சரக்குகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான சோதனைகளை நடத்தியது.

 

23.05.2022 அன்று தனியார் ஏரோஸ்பேஸ் சர்வீஸஸ் நிறுவனமான ப்ளானட் எக்ஸ் மற்றும் TSAW ட்ரோன் நிறுவனமும் இணைந்து BVLOS (Beyond Visual line Of Sight)தொழில்நுட்பம் மூலம் ட்ரோன் டெலிவரி சேவைக்கான சோதனையை மதுரை தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள ST கொரியர் கிடங்கிலிருந்து பல்வேறு பகுதிகளில் இருக்கும் விநியோக மையங்களுக்கு ஆவணங்கள் மற்றும் சரக்கு விநியோக சேவைகளில் ட்ரோன்களை பயன்படுத்துவதன் நம்பகத்தன்மையையும் மதிப்பீடு செய்தது.

 

இத்தகைய சேவைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் கே.கே நகரில் உள்ள பலேபு பார்மா மற்றும் கருப்பாயூரணியில் உள்ள சிப்லா கிடங்கிற்கு மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும், மதகுபட்டி ரோட்டில் உள்ள சதர்ன் மோட்டார்ஸ் நிறுவனதிற்கு ஆட்டோமொபைல் ஹார்டுவேர் பொருட்களையும் மற்றும் கடச்சனேந்தலில் உள்ள ஆம்வே ஹவுஸிற்கு உணவுப்பொருட்களையும் ட்ரோன் மூலம் கொண்டுசென்று சோதனை நடத்தப்பட்டது.

 

இந்நிகழ்வை பற்றி ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரியுமான A.சதீஷ்குமார் கூறுகையில் இந்த ட்ரோன் சோதனை நிகழ்வு சேவை செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி சாலை போக்குவரத்து தடைகளையும் தாண்டி தொலைதூர கிராமங்களையும் இணைகின்றன.

 

மேலும் சிறந்த கட்டமைப்பு,பயன்பாடு மற்றும் சேவைகளையும் எளிதில் மக்களுக்கு செல்ல உதவுகிறது. இந்த சோதனையின் வெற்றியை தொடர்ந்து ட்ரோன் மூலம் மருத்துவதுறைக்கு உதவும் வகையில் ஒரு சங்கிலி அமைப்பை ஏற்படுத்தி அதில் சிகிச்சை மையம், ஆய்வகம் மற்றும் மருந்தகம் போன்றவற்றை இணைத்து பெரிதும் பயன்படும் வகையில் ஒருதிட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதுபோன்ற சோதனைகளின் வெற்றி தொழில்துறை வளர்ச்சி அடைய உதவும் எனவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon