--- --:--:-- --

தமிழக முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்..!

4

தென்காசி அருகே தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்ட மர்மநபர் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி இணைப்பை துண்டித்துள்ளார்.

 

இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் என்பதும் இவர் அம்பை ரயில் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

 

மேலும் இவரது தந்தை பெரியார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இடப் பிரச்சினை தொடர்பாக புகாரை அளித்தார் எனவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon