மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்த மூவர்..!
குளித்தலையில் செவிலியர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வரான அதிமுக வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் செவிலியர் கல்லூரி செயல்படுகிறது.
அங்கு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் பள்ளி விடுதியில் தங்கி படித்துள்ளார். அவரை கல்லூரி முதல்வரும், அதிமுக நிர்வாகியுமான செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
அமுதவள்ளி, சமையல் செய்பவர் மகாலட்சுமி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். சம்பவத்தை பெற்றோரிடம் கூறிய மாணவி சம்பவத்தை எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை மகளிர் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





