ரத்த கசிவு காய்ச்சலால் 90பேர் பாதிப்பு..!
ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கில் சமீபகாலமாக ரத்தக்கசிவு ஏற்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.
இந்த காய்ச்சலால் மனிதர்களின் உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும். இரத்தக்கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பிற்கு எந்த வகையான வைரஸ்கள் காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





