36 பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபர்..!
டெல்லியில் 36 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய பர்கான் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இணையத்தில் திருமண பதிவு மையத்தில் பல்வேறு புனை பெயர்களில் வரன் தேடுவதாக அறிவித்த அந்த மோசடிப் பேர்வழி ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
போலீசார் விசாரித்த போது இதேபோல 36 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்க இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





