பள்ளி மாணவன் தலை நசுங்கி பலியானதில் இருவர் படுகாயம்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருமண மண்டபம் ஒன்றில் ஆந்திராவை சேர்ந்த மணமகனுக்கும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
அப்போது முதல் தளத்தில் உணவு பரிமாற கீழ் தளத்திலிருந்து உணவு எடுத்து சென்றபோது மின்தூக்கி திடீரென அறுந்து விழுந்ததில் உணவு பரிமாற வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விக்னேஷ். ஜெயராமன் ஆகிய இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மூவரை கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





