தமிழகத்தில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடக்கம்..!
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்பொழுது தொடங்கப்படும் என பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுகிறது. இதனையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்பொழுது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கட்டாயம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





