பேரக் குழந்தை பெற்றுத் தரவில்லை என்பதால் நஷ்ட ஈடு..!
ஒரு வருடத்தில் பேர குழந்தையை பெற்று தரவேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு தரவேண்டும் என ஒருவர் தன் மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரித்துவார் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
விமானியாக உள்ள தனது மகனை அமரிக்காவில் படிக்க வைத்ததாகவும் கடந்த 2016ஆம் ஆண்டு தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அவரை தேனிலவுக்கு தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன் மகனை வளர்க்க 2 கோடி வரை செலவு செய்து என கூறியுள்ளார்.
இப்படி வளர்த்த மகன் மருமகள் வீட்டார் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் எனவும் இதுவரை எனக்கு பேரக் குழந்தை இல்லை என்பதால் என் வம்சம் இதோடு முடிந்து விடும் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் அடுத்து ஒரு வருடத்தில் பேர குழந்தை பெற்றெடுக்க வேண்டும் அல்லது ஐந்து கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த பெண் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





