--- --:--:-- --

பள்ளத்தில் மண் சரிந்ததில் தொழிலாளி கான்கிரீட் கம்பிகள் குத்தி பரிதாப உயிரிழப்பு..!

2

சென்னை பல்லாவரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் சுமார் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கப்பட்டது.

 

காலையில் வழக்கம்போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்ட நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விழுந்துள்ளது. மண்சரிவில் சிக்கி கொண்ட தினேஷின் கழுத்தில் கட்டுமான இரும்பு கம்பிகள் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon