--- --:--:-- --

தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

10

விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் முதன் முதலில் ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

இதன்பின் இவர் தொகுப்பாளராகவும், போட்டியாளர்களாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

 

இதன்பின், ஸ்டார்ட் ம்யூசிக், தி வாள், போன்ற பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடத்தை பிடித்துள்ளார். தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

 

இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்றாலும், பெரிதும் சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon