--- --:--:-- --

கதவை இழுத்து மூடிய கல்லூரி நிர்வாகம்..!

1

தென்காசி அருகே மாணவ, மாணவிகள் தாமதமாக வந்ததாக கூறிய கல்லூரி நிர்வாகம் கதவை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு ஏராளமான மாணவ மாணவிகள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கல்லூரிக்கு வெளியே மாணவ மாணவிகள் நிறுத்தி வைக்கப்பட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் வெளியே நின்று கொண்டிருந்த நிலையில் தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்குமாறு அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.

 

பேருந்து தாமதமாக வந்ததால் ஏற்பட்ட தாமதம் என்று அவர்கள் கூறவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon