--- --:--:-- --

கண்ணிமைக்கும் நேரத்தில் கால்வாய்க்குள் பாய்ந்த கார்..!

10

ரமக்குடி அருகே அதிவேகமாக சென்ற கார் சாலையின் நடுவில் இருந்த சிறிய கால்வாய்க்குள் பாய்ந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், ஜெயக்குமார் ஆகியோர் நண்பனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே அவர்களது கார் சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது வேகத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த பாரிகார்டை வேகம் குறையாமல் கடக்க முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சற்று உயரமான பறந்து தடுப்பையும் கடந்து சாலை நடுவே இருந்த கால்வாய்க்குள் விழுந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon