பிரியங்காவின் போட்டோஷூட் வைரல்..!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சி மட்டுமின்றி இவர் தொகுத்து வழங்கி ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன்பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தனது துணை தொகுப்பாளர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போது தனது சமீபத்திய புகைப்படங்கள் அல்லது தனது நண்பர்களுடன் இணைந்து கலாட்டா செய்யும் வீடியோக்களை மட்டுமே பதிவிடுவார் பிரியங்கா. ஆனால், தற்போது தீடீரென தான், நடத்தியுள்ள கலக்கல் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லைக்ஸை குவித்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




