பிறை தெரிந்ததால் நோன்பு கடைபிடிப்பு..! சிறப்பு தொழுகையுடன் தொடக்கம்..!
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தமிழகத்தில் இன்று அதிகாலையில் சிறப்பு தொழுகையுடன் தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களிலும் நோன்பு இருப்பது வழக்கம்.
ரம்ஜான் மாதத்தின் இருபத்தி ஒன்பதாம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை ஹாஜி தெரிவித்தார்.
அதன்படி இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தமிழகத்தில் இன்று அதிகாலை சிறப்பு தொழுகையுடன் தொடங்கியுள்ளது.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே தொடங்கும் இஸ்லாமியர்களின் நோன்பு சூரியன் மறைந்த பின்பு நோன்பை முடித்துக் கொள்வார்கள். முப்பது நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




