சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்தத் துறை தனியாக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வென்ற திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த தகவலை சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஆந்திரா, கர்நாடகம் அதற்குப்பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய மூன்றாவது மாநிலம் தமிழகம் ஆகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




