பணியிடமாறுதல் பெற்ற ஆசிரியரை செல்லவிடாமல் சூழ்ந்த மாணவர்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர் பள்ளியை விட்டு செல்ல விடாமல் மாணவர்கள் உணர்ச்சி போராட்டம் நடத்தியுள்ளனர். ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த கண்ணன் அரசு பள்ளியில் பயிலும் எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தில் எவ்வித சிரமமுமின்றி இணையத்தின் உதவியுடன் எளிதாக கற்று கொடுத்து வந்துள்ளார்.
இதனால் எளிதாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட அந்த பள்ளி மாணவர்கள் அவருடன் மிகவும் அன்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் அவருக்கு வேறு பள்ளிக்கு செல்ல இடமாறுதல் கிடைத்துள்ளது. இதை அறிந்த மாணவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு வேறு பள்ளிக்கு அவரை செல்ல வேண்டாம் என கூறி உணர்ச்சி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ஆசிரியர்களுக்கு ஆங்கில பாடலுடன் மாணவர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





