சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர்..!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அகரம் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேசிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




