ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கும் பூனம் பாஜ்வா !
மூன்று வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் பூனம்பாஜ்வா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். மும்பையை சேர்ந்த பூனம் பாஜ்வா 2008ல் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.
தெனாவெட்டு, கச்சேரி, ஆரம்பம், அரண்மனை 2 போன்ற பல படங்களில் நடித்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த குப்பத்து ராஜா படத்தில் நடித்த பின் அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் குருமூர்த்தி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக வருகிறார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கேபி தனசேகர் குருமூர்த்தி படத்தை இயக்கி வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




