தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்..!
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோடை காலத்தை எதிர்நோக்கியுள்ள தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ளது.
மேலும் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 21ம் தேதி புகழ்பெற்ற வங்கதேசம். மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





