அடுப்பை அணைக்க மறந்ததால் பற்றி எரிந்த வீடு..!
திருப்பத்தூர் அருகே உணவு சமைத்து விட்டு அடுப்பை சரிவர பராமரிக்காததால் வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது. திருப்பத்தூர் மாவட்டம் நிம்மியம்பட்டு பகுதியில் வசித்து வருபவர்கள் உமா, ராஜேந்திரன் தம்பதி.
உமா தனது வீட்டில் மண் அடுப்பில் சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
அக்கம்பக்கத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் மாடு, உணவு தானியங்கள் என அனைத்தும் தீயில் கருகி சாம்பல் ஆனது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





