--- --:--:-- --

காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திச் சென்றதாகப் புகார்..!

1

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காதல் திருமணம் செய்த நபரை தாக்கி அவரது மனைவியை கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பநாயக்கன்பட்டி சேர்ந்த அஜித்குமார் , சுஜித் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பு பெற்றோரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதையடுத்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது திடீரென பெண் வீட்டார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ராசிபுரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர். ஆனால் தங்களது காவல் எல்லைப் பகுதிக்குள் வராது எனக் கூறி காதல் ஜோடி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் வேறுவழியின்றி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை பெண் வீட்டார் கடுமையாக தாக்கி பெண்ணை கடத்தி சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதில் காயமடைந்த அஜித் குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பு தரவில்லை என்பதாலேயே தனது மனைவியை கடத்திச் சென்றதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon