29 பெண்களுக்கு பெண் சக்தி விருது..!
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இருபத்தி ஒன்பது பெண்களுக்கு குடியரசுத் தலைவர் பெண் சக்தி விருதுகளை வழங்குகிறார். விவசாயம், சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளித்த பெண்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
2020 – 2021 ஆம் ஆண்டுக்கான விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இந்நிலையில் பெண்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களது முத்திரையைப் பதித்து இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். சமூக தொழில் முனைவோர், பழங்குடியின செயற்பாட்டாளர், இந்திய தலைமை நிர்வாகி உள்ளிட்டோர் இந்த விருதை பெறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




