உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்..!
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில் ஏற்கனவே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எஞ்சிய இந்தியர்களையும் விரைவில் மீட்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இலங்கை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





