--- --:--:-- --

இந்தியர்களை மீட்க மேலும் 7 சிறப்பு விமானங்கள் ..!

3

ருமேனியா தலைநகர் புகாரிலிருந்து 249 இந்தியர்களுடன் ஐந்தாவது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டது. தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவ மாணவிகள் உக்ரைனில் உள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம், இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள்.

 

சுரங்கங்களிலும் பதுங்கு குழிகளிலும் மறைந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான் பகுதி மூடப்பட்ட நிலையில் அண்டை நாடுகள் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

 

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் விதமாக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon