--- --:--:-- --

குழந்தைகளை கொன்று தூக்கிலிடுவேன் எனக்கூறிய நபர் கைது..!

9

னியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக் கொன்று பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற வெங்கடேஷ் என்பவர் அண்மையில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

 

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை கள் வலுவடைந்த நிலையில் சமூகவலைதளத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon