4வது மாடியில் ஜன்னலில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சுத்தம் செய்யும் பெண்..!
என்னதான் சுத்தத்தை விரும்புவதாக இருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் வெளிப்புற ஜன்னலை எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சுத்தம் செய்ய குருட்டுத்தனமான ஒரு தைரியம் வேண்டும்.
காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் வசிக்கும் குடும்ப தலைவி தனது வீட்டின் வெளிப்புற ஜன்னலை நுனியில் நின்றவாறு சுத்தம் செய்துள்ளார். இதனை அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் பெண் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதனைப் பார்த்தவர்கள் கொஞ்சம் தவறினால் ஏற்படும் விபரீதம் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





