--- --:--:-- --

ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கும்..!

4

குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மதுரை ஐயர் பங்களாவில் உள்ள சேவியர் மெட்ரிக் பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வாக்கு செலுத்திய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர் பெண்களுக்கு அடிப்படைத் தேவைகள், பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார் எனவும் தெரிவித்தார்.

 

மேலும் அதிமுகவினர் எத்தனை பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon