--- --:--:-- --

கர்ப்பிணிக்கு காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சியம்..!

2

ராணிப்பேட்டையில் 17 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கருவுற்ற பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

சோலிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியை சேர்ந்தவர் அம்பிகா 17 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு கருவுற்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 14ஆம் தேதி திடீரென காய்ச்சல் வந்து அம்பிகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

 

இந்த நிலையில் தான் வழக்கமாக பரிசோதனைக்குச் செல்லும் மருத்துவமனைக்கு சென்ற அம்பிகாவுக்கு பாரசிட்டமால், சி‌பி‌எம் மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவை அனைத்தும் ஜனவரி மாதம் எக்ஸ்பைரி ஆகி இருந்தது தெரியவந்தது.

 

மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது அங்கிருந்தவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக சொல்லப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon