--- --:--:-- --

மேலும் ஒரு வினாத்தாள் கசிந்ததாக புகார்..!

6

பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு இன்று நடைபெறக்கூடிய வணிக கணிதம் தேர்வில் வினாத்தாள் கசிந்து இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் பிளஸ் 2 கணிதம் வினாத்தாள்கள் ஏற்கனவே கசிந்த நிலையில் மேலும் ஒரு வினாத்தாள் தற்பொழுது கசிந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

 

வினாத்தாள் விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon