ஹிந்தி பேச தெரியுமா என ஸ்ருதிஹாசனிடம் கேள்வி..! விளாசிய ஸ்ருதி..!
தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதால் ஹிந்தி பேச தெரியுமா என நக்கலாக கேட்ட ஒருவருக்கு அதிரடி சரவெடி பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன் . தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் நன்றாக ஹிந்தி பேசுவார்.
அவரிடம் இன்ஸ்டாவில் ஒரு ரசிகர், தென்னிந்தியாவில் இருந்து வந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு ஹிந்தி பேச வருமா என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி ஹாசன் தென்னிந்தியா வேறு கிரகத்தில் உள்ளது என்பதைப் போலவும் அங்கிருந்து வந்தால் ஹிந்தி பேச தெரியுமா என கேட்பது கொஞ்சம் கூட நல்லா இல்லை என பதில் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





