--- --:--:-- --

பாம்புபிடி வீரர் சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம்..!

10

நாகப் பாம்பு தீண்டியதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிவீரர் வா வா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயிர் காக்கும் கருவியாக வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

 

தற்பொழுது சுரேஷ் தாமாகவே சுவாசிப்பதாகவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பனியாளர்களுடன் பேசும் அளவிற்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளரான மருத்துவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon