--- --:--:-- --

பூங்கா பராமரிப்பாளரைக் கொன்றுவிட்டு தப்பிய சிங்கங்கள்..!

6

ரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் இருந்த பெண் சிங்கம் பராமரிப்பாளரை கொன்று விட்டு உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வரும் இரண்டு சிங்கங்கள் திடீரென கூண்டிலிருந்து வெளியே வந்துள்ளது.

 

அப்பொழுது சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் உணவு கொண்டு வந்துள்ளார். அப்போது கூண்டில் இருந்து வெளியேறிய இரண்டு பெண் சிங்கம் பராமரிப்பாளரை கடுமையாக தாக்கியது. இதில் பராமரிப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

பின்னர் இரண்டு சிங்கங்களும் தப்பி சென்றன. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டது. பூங்கா முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு இரண்டு சிங்கங்களையும் பாதுகாப்பு படையினர் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon