இன்று விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம்..!
விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 169 இடத்தில் போட்டியிட்டதில் 129 இடங்களில் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கினர். நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளார்.
மக்கள் இயக்கத்தினர் தனது புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொள்ள சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தொடர்ந்து நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.






