ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். பூனானி பகுதியில் இருந்து சென்ற அரசு பேருந்து மூலம் ரேவதி பயணம் செய்த போது வளைவில் திரும்பும் போது பேருந்திலிருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார்.
அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஓட்டுநரே விபத்திற்கு காரணம் என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





