கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு..!
காஞ்சிபுரம் மாவட்ட மணிமங்கலம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பு பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ராஜேஷ் மற்றும் ஏழுமலை ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த இருவரின் உடலை மீட்டனர். இந்தியாவில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





