--- --:--:-- --

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா..!

6

ஒரே நாளில் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் அண்மைக்காலமாக கொரொனா அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பதிவான உச்சபட்ச பாதிப்பை வெளியிடும் பல்கலைக் கழகப் புள்ளி விவரப்படி அமெரிக்காவில் கடந்த வாரத்தில் மட்டும் 100 இல் ஒருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் கொரொனா தொற்று வேகமெடுத்தது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் ஜோபைடன் அதிகாரிகளுடன் இன்று மருத்துவத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon